குண்டும் குழியுமான சாலைக்கு போலீசார் தீர்வு! – ஜேசிபி மூலம் குழிகளை சீரமைத்த நகர் மேற்கு காவல்துறை!

திண்டுக்கல் R.M. காலனி மெயின்ரோடு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும், சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் நேரடியாக களத்தில் இறங்கினர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்த பள்ளங்களில் மண்ணை நிரப்பி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்ட பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டுகளை தெரிவித்தனர்.