பேருந்தை மறித்து பெண்களின் பரபரப்பு வாக்குவாதம் – போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி!

நடுரோட்டில் அரசுப் பேருந்தை மறித்து, நடத்துனரிடம் பெண்கள் சிலர் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களை, பாதுகாப்புடன் செல்லுமாறு பேருந்து ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், பேருந்தை நடுவழியிலேயே நிறுத்தி நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

​பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்ட அப்பெண்களின் செயலுக்கு அங்கிருந்த பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.