கிருஷ்ணகிரியில் சேற்றில் நெல் நாற்று நட்டு நூதனப் போராட்டம்!

பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி, ஊத்தங்கரை அருகே சாலையில் தேங்கிய சேற்றில் நெல் நாற்று நட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.