கோவையில் 6 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மாணவர் அகிலனின் உடல் அடக்கம்!

கோவையில் பள்ளியில் நிலவியதாகக் கூறப்படும் சாதியப் பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவர் அகிலனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது உடலைப் பெறாமல் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 6 நாட்களாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, மாணவரின் உடலைக் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் மாணவர் அகிலனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.