கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்!

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து ராகவன் (25) என்ற கைதி காவலர்களைத் தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இவர், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்டபோது, அதிகாலை 12.45 மணி முதல் 1 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் தப்பியோடியுள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை போலீஸ் காவலில் இருந்து தப்பியவர் என்பதால், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிய கைதியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.