காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து மாணவர்கள் கதறி அழுதபடி கோஷம்.

கேரளப் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் ஒருமுறை பெரும் வன்முறையும் பதற்றமும் வெடித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மாணவர் உரிமைகளை வலியுறுத்தியும் SFI (இந்திய மாணவர் சங்கம்) அமைப்பினர் இன்று தீவிர முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.