80வது சுதந்திர தின விழா – தவெக 78வது வார்டில் தேசியக் கொடியேற்றம்!

கோவை புறநகர் வடக்கு மாவட்டம், தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வபுரம் பகுதி 78வது வார்டு சார்பில், 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி 78வது வார்டு பகுதியில் தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, மகளிரணி இணை அமைப்பாளர் ரேவதி, செல்வபுரம் பகுதி செயலாளர் பாலா, பகுதி துணைச் செயலாளர் மௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், 78வது வார்டு செயலாளர் மணிகண்டன், இணைச் செயலாளர் முருகன், இளைஞரணி அமைப்பாளர் கிருபா, இணை அமைப்பாளர் சூர்யா, மாணவரணி அமைப்பாளர் விஜய், இணை அமைப்பாளர் அகிலேஷ், மகளிரணி அமைப்பாளர் ரம்யா, துணைச் செயலாளர் பூர்ணிமா, தொண்டரணி அமைப்பாளர் நவீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

சமூக நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.