பெண்களுக்கான சுதந்திரம் கிடைத்துவிட்டதா? – கோவையில் சிரிப்பு பட்டிமன்றம்

கோவை ஸ்டார் சினிமாஸ் மற்றும் கஸ்தூரி காலேஜ் இணைந்து வழங்கிய 80-வது சுதந்திர தின விழா சிறப்பு சிரிப்பு பட்டிமன்றம் கோவையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கத் தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு, விஜய் டிவி புகழ் சொல்லரசி அன்ன பாரதி நடுவராக கலந்து கொண்டார்.

“இன்றைய சூழலில் பெண்களுக்கான சுதந்திரம் கிடைத்துவிட்டதா? இல்லையா?” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை நகைச்சுவையுடன் முன்வைத்தனர்.

பேச்சாளர்களின் நகைச்சுவை கலந்த வாதங்களால் அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. பெண்களின் சுதந்திரம், சமூகத்தில் அவர்களின் நிலை, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பட்டிமன்றத்தில் சுவாரஸ்யமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவைப்புதூர் கஸ்தூரி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் ஒருங்கிணைப்பாளர் அனிதா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு சிரிப்பு பட்டிமன்றம், சமூக கருத்துகளையும் நகைச்சுவையையும் ஒருங்கிணைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது.