கோவை ஒண்டிப்புதூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா-2026 நிகழ்ச்சியில், கராத்தே மாணவர் பிரதியுமன் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.



15 வயதான மாணவர் பிரதியுமன், சுமார் 3,500 கிலோ எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை தனது பற்களால் இழுத்து புதிய சாதனை படைத்தார்.
மாணவரின் இந்த சாதனை, விளையாட்டு விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவரது திறமை மற்றும் சாதனையைப் பாராட்டி, சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ். புவனேஸ்வரி, பள்ளியின் தாளாளர் அருட்தந்தை பெட்ரிக் இருதயராஜ், முதல்வர் அருட்தந்தை கிருபாகரநாதன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இளம் வயதிலேயே கராத்தே துறையில் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்த மாணவர் பிரதியுமனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அவரது சாதனை, சக மாணவர்களுக்கும் விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.









Leave a Reply