மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பட்டதாரி கனவுடன் படித்து வந்த K. அமுதன் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் தமிழக காவல்துறையும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
“கொலையை கண்டிக்கிறோம்; நீதி கேட்கிறோம்” என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சம்பவம் தொடர்பாக உண்மைகள் மறைக்கப்படுவதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க கல்லூரிகள் மற்றும் காவல்துறை இணைந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply