திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட செவிலியர் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சையே மாணவியின் இறப்பிற்கு காரணம் எனக்கூறி சக மாணவிகள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சீதாலட்சுமி, திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு செவிலியர் (B.Sc. Nursing) படித்துவந்தார்.
மூக்கு மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்சினைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அவருக்கு மயக்க மருந்து (Anesthesia) வழங்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மாணவர்களின் கொந்தளிப்பு: மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றப் படிக்கும் ஒரு மருத்துவ மாணவிக்கே இந்த நிலைமையா? என ஆவேசமடைந்த சக செவிலியர் மாணவிகள் மற்றும் மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தின் முன் திரண்டு விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: “அளவுக்கு அதிகமான மயக்க மருந்து மற்றும் தவறான சிகிச்சையே இந்த மரணத்திற்கு காரணம்” என குற்றம்சாட்டிய மாணவர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

What’s your reaction?
Love0
Sad2
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply