தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், உடற்கல்வி ஆசிரியர் சண்முக சுந்தர ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் ஆசிரியர் திவ்யா ஆகிய இருவரையும் காவல்துறையினர் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மாணவிகளுக்கு தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply