எலக்ட்ரோடெக் 2026: கோவையில் சர்வதேச தொழில்சார் மின்நுட்பக் கண்காட்சி ஆகஸ்ட் 21 முதல் தொடக்கம்!

கோவையில் கொடிசியா (CODISSIA) வளாகத்தில் ‘எலக்ட்ரோடெக் 2026’ (Electrotech 2026) தொழில்சார் சர்வதேசக் கண்காட்சியின் 8-வது பதிப்பு வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்குகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் உற்பத்தியாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

​இக்கண்காட்சியில் மின் அமைப்புகள், மின்மாற்றிகள் (Transformers), கேபிள்கள், சோலார் உபகரணங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பாகங்கள் (EV components) காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொழில்முனைவோர்கள், பொறியாளர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.