மதுக்கரை–நீலாம்பூர் பைபாஸ் சாலையில் இரு கார்கள் மோதல்!

மதுக்கரை–நீலாம்பூர் பைபாஸ் சாலையில், போடிபாளையம் பிரிவு பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்களில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.