திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதையில் இளைஞர் அட்டகாசம்!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் போதையில் இருந்த அந்த இளைஞர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை அங்கிருந்து விரட்டியதாக தெரிகிறது.
சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.