எலக்ட்ரானிக் சிட்டி அருகே ₹9 கோடி ரொக்கம் பறிமுதல்

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே காரில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் கணக்கில் காட்டப்படாத சுமார் ₹9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி ஓசூர் சாலையில் காரை நிறுத்தி சோதனை செய்ததில் பணம் சிக்கியது. காரில் இருந்த இருவர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ₹1.3 கோடி மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.