கோவை க.க.சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில், ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓணம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பி. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் பி. சாத்துக்குட்டி தலைமை உரையாற்றினார்.
அப்போது, அனைவரின் வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஐஸ்வர்யம் நிறைந்த பொன்னோணம் அமைய வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் துணைத் தலைவர் ஷைலஜா வேணு, செயலர் பி. ஸ்ரீஹரி, இணைச் செயலாளர் கே.ஏ. பங்கஜ் குமார், பொருளாளர் பி.வி. சஜீஷ் குமார், தலைமை செயல் அதிகாரி அஷ்வின் டி.கே. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓணம் விழாவை முன்னிட்டு சிங்காரி மேளம், திருவாதிரை நடனம், மோகினியாட்டம், கதகளி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், உரியடி, கயிறு இழுக்கும் போட்டி, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
நிகழ்ச்சியின் நிறைவாக கலைக்குழு தலைவர் முனைவர் ஆர். சுபிதா நன்றியுரை வழங்கினார்.
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மாணவர்களின் கலைத்திறனை ஒருங்கிணைத்த இந்த ஓணம் விழா, கல்லூரி வளாகத்தில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.









Leave a Reply