ரூ .2.20 லட்சம் பணத்தகராறு: நடவடிக்கை கோரி பெண் பரபரப்பு மனு – போலீசார் விசாரணை

​கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமதி. S. மாலா என்பவர் K.P.M. செங்கல் கால்வாய் உரிமையாளரிடம் நான்கு கட்டங்களாகப் பணம் தரவேண்டியிருந்த சூழலில், இதுவரை ரூ. 1,20,000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீதமுள்ள தொகை ரூ. 2,20,000 இன்னும் தரப்படவில்லை என்றும், உரிமையாளர் மீது தமக்குக் கடும் சந்தேகம் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கற்கால்வாய் உரிமையாளரிடம் ஏற்பட்ட பணத்தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தனக்குத்தானே சமாதி கட்டிக்கொள்வதாக பெண் ஒருவர் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்து மனு அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஜூலை 7, ஜூலை 10 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் நேரடியாக மனு அளிக்கப்பட்டது.
​இதனைத் தொடர்ந்து, 13-08-2026 அன்று மனு எண் வழங்கப்பட்டு, CSR நகலும் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை காவல்துறை தரப்பில் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்கத் தவறினால், தனக்குத்தானே சமாதி கட்டிக் கொள்ளப்போவதாக அவர் அதிகாரிகளுக்குக் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.