எங்க ஊருல ஒரு மலை இருந்துச்சு… இப்போ காணோம்!” – வடிவேலு ஸ்டைலில் கனிம வளக் கொள்ளையை அம்பலப்படுத்திய அமைச்சர்!
வடிவேலு காமெடியில கிணத்த காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல போய் நிப்பாங்களே… ஞாபகம் இருக்கா? ஆனா, இப்போ நிஜமாவே **”மலையைக் காணோம்”**னு தமிழக சட்டப்பேரவையில நம்முடைய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு புகைப்பட ஆதாரத்தோட ஒரு ஷாக் கொடுத்திருக்காருங்க!
மனிதர்கள் உருவாவதற்கே முன்பே, அதாவது சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமையான பல மலைகளும் குன்றுகளும் இந்த மண்ணில் இருந்ததாம். ஆனா, எம்-சாண்ட் (M-Sand) மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகக் கடந்த சில காலமா நடந்தேறிய கனிம வளக் கொள்ளையால, அந்த மலைகள் இருந்த இடமே தெரியாம காணாமல் போயிருக்குன்னு அமைச்சர் பகீர் உண்மையை உடைச்சிருக்காரு.எங்கெங்கெல்லாம் மலைகள் மாயமாகி இருக்கு தெரியுமா?”ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டையே வாசிச்சிருக்காரு அமைச்சர். குறிப்பா…
பெரம்பலூர் மாவட்டம்: பீமரிஷி, கோணாரப்பாளையம்
மதுரை மாவட்டம்: செங்குணம் மலை, சிரையூர், கொண்டையம்பட்டி குன்றுகள்
திருப்பத்தூர் மாவட்டம்: ஆம்பூர்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம்: அனந்தலை மலை
கோயம்புத்தூர் மாவட்டம்: முத்தூர்
தென்காசி மாவட்டம்: கோணமலை
இப்படிப் பல மாவட்டங்கள்ல இருந்த மலைகள் மற்றும் குன்றுகள் எல்லாம் அப்படியே அபேஸ் பண்ணப்பட்டிருக்குனு போட்டோக்களோட ப்ரூஃப் காட்டியிருக்காங்க!கிணத்தையே காணோம்னு சொன்னா ஊரே சிரிக்கும், ஆனா மலையே காணாமல் போனது நம் சுற்றுச்சூழலுக்கு விபத்து!”னு உணர்ந்த அரசு, இனிமே இந்த கனிம வளக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நவீன டிஜிட்டல் முறைகள், ட்ரோன்கள் (Drones) மற்றும் செயற்கைக்கோள் (Satellite) கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப் போறதா எச்சரிச்சிருக்காங்க.
மலைகளையே காணாமல் அடிக்கிற இந்த கொள்ளையர்களை இனிமே ட்ரோன் மூலமா வச்சு செய்வாங்களான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!









Leave a Reply