கடலூர்: வேப்பூர் அருகே தனியார் மதுபான பார் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ.9,000 பணத்தை திருடிச் சென்ற நபரை சிறுப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் உள்ள தனியார் மதுபான பாருக்கு மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வந்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு சென்ற நிலையில், வாகனத்தின் பெட்டியை மர்ம நபர் உடைத்து அதிலிருந்த ரூ.9,000 பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சிறுப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் பெட்டியை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply