ஆனைமலையில் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை – 430 பாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது.

கோவை மாவட்டம் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவரை கைது செய்தனர்.

மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 430 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.