அமைச்சர் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல!” – மரிய வில்சன் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி, அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது அமைச்சர் பதவியில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், “அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல; அவரைவிட உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள்கூட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்” என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், நீதிமன்ற விசாரணையில் இருந்து பதவியை காரணம் காட்டி விலக்கு பெற முடியாது என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.