ஓசூர் நெடுஞ்சாலையில் திடீர் தீப்பிடித்த கார்! சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் – பரபரப்பு!

பெங்களூரு–ஓசூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேரலூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் இன்ஜின் பகுதியில் தீப்பற்றியதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி வெளியேறியுள்ளார்.
தொடர்ந்து கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அருகிலிருந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அட்டிபெலே போலீசார், தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.