சிறுமுகை அம்மன் புதூர் பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்பனை புகார் – இருவர் கைது!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள அம்மன் புதூர் பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் இருவரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ரஞ்சித் மற்றும் நிதிஷ் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இருவரையும் சிறுமுகை போலீசார் கை விலங்குடன் அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.