குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் 15 அடி மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய விவசாயிகள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலத்தில் மலைப்பாம்பைக் கண்ட விவசாயிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மலைப்பாம்பைப் பத்திரமாக மீட்டனர்.
விவசாய நிலத்தில் புகுந்த ராட்சத மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.