சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ச. ஜோசப் விஜய் தேசியக் கொடியேற்றி வரலாற்று நிகழ்வு!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்த ஜீப் வாகனத்தில் சென்றபடி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக அவர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும்.