80வது சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றிய கோவை மாவட்ட கலெக்டர்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் (Pavankumar G Giriyappanavar, I.A.S.) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு மற்றும் விருதுகளை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.