
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையை சத்யபாமா பெற்றுள்ளார்.
அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் அவையில் இல்லாத நிலையில், மாற்றுத் தலைவராக சத்யபாமா பொறுப்பேற்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் இருக்கையில் ஒரு பெண்மணி அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக இருந்ததாகக் குறிப்பிட்டு, சத்யபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் சத்யபாமா அமர்ந்த இந்த தருணம், பெண்களின் அரசியல் பங்கேற்பை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.









Leave a Reply