கோவையில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் – அமைச்சர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், 71-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், டி.பி. சாலையில், சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, மரத்தை உடனடியாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகளை, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மேலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், விழுந்த மரத்தை விரைந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்றது.