தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்!

கோவையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகாவை, தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் விஜய் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கார்த்திகாவின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.