ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CEC-க்கு எதிரான போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான டெல்லி போலீஸ் ACP விவேக் பகத், தற்போது DCP அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்த பதவி உயர்வு வழக்கமான நிர்வாக உத்தரவின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், பதவி உயர்வு வழங்கப்பட்டதன் நேரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, மூன்று பெண் பத்திரிகையாளர்கள் அளித்த புகார்களும் விசாரணைக்காக டெல்லி போலீஸ் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.










Leave a Reply