குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் அருகே பெய்த கனமழையால் சாலையோர பாறை ஒன்று திடீரென சரிந்து காரின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி (64) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கனமழை காரணமாக பாறைகள் சரியும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.