சண்முகப்பிரியா வீட்டில் அதிரடி சோதனை! – அன்பில் மகேஷ் வழக்கில் புதிய திருப்பம்!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான தனியார் பள்ளி அங்கீகாரம் தொடர்பான லஞ்சப் புகார் வழக்கில், சென்னை பெருங்குடியில் உள்ள தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி வழங்கியதில் பெருமளவில் லஞ்சப் பணம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் சண்முகப்பிரியாவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரின் ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையின்போது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் மேலும் என்ன தகவல்கள் வெளியாகும் என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும்.