கோவை அவினாசிலிங்கம் கல்லூரி அருகே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய சிறிது நேரத்தில் காரில் திடீரென தீப்பற்றியது. காரில் இருந்த பெண், தீப்பிடித்ததை அறிந்ததும் உடனடியாக காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தீ வேகமாகப் பரவியதில் கார் முழுவதுமாக தீப்பற்றி சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply