கோவை மாரத்தான் – கல்விக்காக ஓடிய ஆயிரக்கணக்கானோர்

கோவையில் நடைபெற்ற 7-வது மாரத்தான் போட்டியில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

8 வயது சிறுவர்கள் முதல் 90 வயது முதியவர்கள் வரை கலந்து கொண்டு, உடல்நலம் மற்றும் சமூக அக்கறையை வலியுறுத்தினர்.

21 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த மாரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி, ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஸ்போர்ட்ஸியா நிறுவனம் சார்பில், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.