கோவை மாவட்டம் இந்து மக்கள் கட்சி

கோவை மாவட்டம் இந்து மக்கள் கட்சி
அகில பாரத அனுமன் சேனா சார்பில் 30-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது.

(செப்டம்பர் 14) முதல் (செப்டம்பர் 18) வரை 5 நாட்கள் இன்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

​முதல் நாள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ விராட் வீர சந்தோஷ கணபதி பிரதிஷ்டை மற்றும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

​இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கணபதி மற்றும் அனுமன் சிலைக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பாலாபிஷேகம் மற்றும் பூ அபிஷேகம் செய்யும் நிகழ்வும், மாலை 5 மணிக்கு மாபெரும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.

​மூன்றாம் நாள் புதன்கிழமை மதியம் 1 மணிக்கு மாபெரும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

​நான்காம் நாள் வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

​ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ விராட் வீர சந்தோஷ கணபதி மாபெரும் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளது.

​இவ்விழா ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் LP. சந்தோஷ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் NRK. ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் R. சக்திவேல், இளைஞர் அணி செயற்குழு பொறுப்பாளர் N. கண்ணன் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதி இளைஞர் அணி செயலாளர் S. சபரீஸ்வரன் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

​இந்த ஆன்மீக விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு அருள் பெறுமாறு விழாக்குழுவினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.