கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் – தேர்தல் பாதுகாப்பு குறித்து பிரச்சாரம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் தொடர்பான பிரச்சாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
“தேர்தலை பாதுகாப்போம்; மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றுவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.