கோவை பீடம்பள்ளியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை – ஆவேச கூட்டத்தால் ஷட்டரை மூடிய விற்பனையாளர்

கோவை மாவட்டம் பீடம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதிக்கு அருகே மதுபானக் கடை செயல்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, பெண்கள் உள்ளிட்டோர் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த கூட்டத்தால் மதுபான பாட்டில்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், கடை விற்பனையாளர் உடனடியாக கடையின் ஷட்டரை மூடினார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினர்.