முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V. சம்பத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தங்களின் உழைப்பை மதித்து, பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.














Leave a Reply