கோவையில் சுதந்திர தின விழா – இலவச கண் சிகிச்சை முகாம்

80ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை 68வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசியக் கொடியேற்று விழா நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை பொறுப்பு அமைச்சருமான வி.சம்பத்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், காந்திபுரம் பகுதி செயலாளர் கே.விஜய்ராஜ் ஆலோசனையிலும் விழா நடைபெற்றது.

மாவட்ட இணை செயலாளர் மைக்கேல் குணசிங், மாவட்ட துணை செயலாளர் உண்ணி கிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் ராம்குமார் ஆகியோர் தேசியக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து, 68வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 68வது வார்டு கழக நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து, கே.விஜய்ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.