கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை! “தாய்மாமனாக விஜய் என்ன சொல்ல போகிறார்? சீமான் வேதனை

கோவை: கோயமுத்தூர் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தாய்மாமனாக விஜய் என்ன சொல்ல போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: போதைப் பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?