தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட லண்டன் பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலீடுகளை ஈர்ப்பதே பயணத்தின் நோக்கம் என்றால், தொழில்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஏன் உடன் அழைத்துச் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்துடன் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் உண்மையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது “இன்பச் சுற்றுலாவா?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இதனிடையே, லண்டன் பயணத்தின் மூலம் ரூ.15,300 கோடி முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, முதலீடுகள் தொடர்பான அரசின் விளக்கங்களும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் அரசியல் விவாதமாகியுள்ளன.










Leave a Reply