கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. சோமசேகர் கைது

போலியான உச்சநீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி, ஆயுள் தண்டனை கைதி ஒருவரை விடுதலை செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. சோமசேகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சோமசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலியான நீதிமன்ற உத்தரவு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, கைதி விடுதலை செய்யப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.