தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடக்கம்! – மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்து, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.
ஜூன் 22, 2026 மதியம் 12 மணி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த தகுதியான குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவ சேவைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற்ற தொடக்க விழாவில் குழந்தைகளுக்கு நேரடியாக தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தது கவனம் பெற்றுள்ளது.