நன்னீர் குட்டையில் கழிவுநீரா

கோவை மாவட்டம் சூலூர் அருகே நாகம நாயக்கன்பாளையம் பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஊராழி குட்டையில் கழிவுநீர் கலக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குட்டையை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்து வரும் நிலையில், கழிவுநீர் கலந்தால் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குட்டையை தூர்வாரும் பணியில் ஆழப்படுத்தினால் கரை மற்றும் பிரதான சாலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, கழிவுநீர் கலக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதுடன், குட்டையை ஆழப்படுத்தும் பணியிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.