

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் சார்பில், துடியலூர் பகுதியில் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
துடியலூர் பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை முறையாக வகைப்படுத்தி, தனித்தனியாக சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
குப்பைகளை முறையாக பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், தூய்மையான கோயம்புத்தூரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.









Leave a Reply