ரூ .7 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது! பத்திர எழுத்தரும் சிக்கினார்

ரூ .7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் கைது!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், பத்திரப்பதிவுக்காக ரூ.7 லட்சம் லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரப்பதிவு தொடர்பாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் பத்திர எழுத்தர் வெற்றியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்பதிவாளர் சங்கர் (42), பத்திர எழுத்தர் வெற்றி (30) ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.