தாராபுரம் பிரச்சாரப் பேச்சு தொடர்பாக தவெக புகார்! – ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரிக்கை

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் தொடர்பாக, தவெக சார்பில் தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில், சத்யபாமாவை ‘பெட்டி பாமா’, ‘பால்டி பாமா’ என ஸ்டாலின் குறிப்பிட்டதுடன், அவரது தோற்றம் குறித்தும் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பேச்சு பெண் வேட்பாளரின் உடல் தோற்றத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தவெக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அவமதிப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் திமுக–தவெக இடையிலான அரசியல் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.