மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அச்சரப்பாக்கம் ஒன்றியம் ரெட்டிப்பாளையம் பகுதியில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தவெக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மட்டுமின்றி தாராபுரம் தொகுதியிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வீடியோவில் பணம் வழங்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணமா அல்லது வேறு காரணத்திற்காக வழங்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது
ஊழல் ஒழிப்பு மற்றும் பணத்திற்கு எதிரான அரசியல் என்ற தவெகவின் நிலைப்பாட்டுக்கு மத்தியில் எழுந்துள்ள இந்தப் புகார், மதுராந்தகம் தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply