பாலிவுட் திரையுலகின் மூத்த மற்றும் பிரபல நடிகர் நானா படேகர், தனது 75வது வயதில் காலமானார்.
கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது இல்லத்தில், இன்று அதிகாலை அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சுயநினைவின்றி காணப்பட்ட நிலையில், மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீட்க முயன்ற போதிலும், சிகிச்சை பலனின்றி காலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக அவரது உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நானா படேகர்.
‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘நட்ஸம்ராட்’ உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
நானா படேகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான நானா படேகரின் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply